ஆயக்கலை அறுபத்திநான்கு பற்றி சொல்லத்தான் ஆசை. ஆனால் நமக்கு விரல் விட்டு என்ன கூடிய அளவுக்குத்தான் தெரியும் . அதுவும் உருப்படியா எதுவும் தெரியாது. எல்லாரும் ப்ளாக் எழுதுறாங்கன்னு , என்னையும் சில பேரு ஆசை காட்டுனாங்க ....நீதான் நல்லா பேசுற , நல்லா எழுதுறனு ...ஆசை யார விட்டுச்சி...அதுதான் முயற்சி பண்ணுறேன் . சும்மா நம்மக்குள பேசுவோமே அதத்தான் கொஞ்சம் அறிவுபூர்வமா, அனுபவபூர்வமா , உணர்வுபூர்வமா எழுத முயற்சி செய்யிறேன். மொத்ததில உங்களோட என்னைய connect பண்ணிக்க விரும்புறேன்.பெண்களை பற்றிதான் எழுதுறான்னு ஆண்கள் நிராகரிக்க வேண்டாம் , நீங்களும் வாசியுங்க...எங்கேயாவுது உங்கள் சகோதிரிய பார்க்கலாம் , உங்கள் தோழிய புரிஞ்சிக்கலாம் , உங்க அம்மாவை இன்னும் நல்லா தெரிஞ்சிக்கலாம். எல்லாம் தெரியும்னு சொல்லுறீங்களா , வாங்க எங்க குழப்பங்களுக்கு பதில் சொல்லுங்க....முக்கால் வாசி நேரம் உங்கள பற்றி புரிஞ்சிக்க முடியாம தான் நாங்க தடுமாருறோம்....நீங்க எங்களுக்கு உதவி செஞ்சா மாதிரியும் இருக்கும் , எங்களையும் புரிஞ்சா மாதிரி இருக்கும்....

Thursday, August 8, 2013

என் குலம்

தேடி பிடித்து முக நூலில்
சேர்த்த பழைய தோழிகளை 
unfriend செய்து வைத்தேன் !

அக்கம் பக்கம் பரிட்சியமில்லா ஊருக்கு 
வேலைக்கு விண்ணப்பித்து வைத்தேன் !
அப்படியே தொலைபேசி இணைப்பை  துண்டித்து வைத்தேன் !

செல்ல மகள் கட்டியணைக்கும் 
கரடி பொம்மையை  குப்பையில் எறிந்தேன்.!
அவள் பள்ளி ஆசிரியையிடம் எரிந்து விழுந்தேன் !

நீண்டு வளர்ந்த கூந்தலை வெட்டினேன் ,
நீட்டமாய் நகங்களை வளர்த்தேன் ,
பொன்னகையோடு புன்னகையையும் மறைத்தே வைத்தேன் !

அம்மாவிடம் ரகசியம் காத்தேன் ,
அண்ணியிடம் அடக்கம் பழகினேன் !
உறவினரிடம் தூரம் அனுசரித்தேன் !

கணவனே என்னை - நீ 
விவாகரத்து செய்ததில் -நான் 
பயந்தது வாழ்க்கையை பார்த்து அல்ல !
ஆண்களை பார்த்தும் அல்ல!
பழகிய என் குல பெண்களை பார்த்தே!